Saturday, December 6, 2008

எனக்கு பிடித்த கவிதை ....

விலக்க முடியாத போர்வையின்
கணகனப்பை விலக்கி
நான் உன்னை தேடுகிறேன் .
நீ அங்கு இல்லை.
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்
இனிய முத்தங்களும்
நினைவுகளும் மட்டுமே
உனது மார்பில் கனவு காணவோ
உனது உடலை ரசித்திருக்கவோ
உனது இதழை சொந்தமாகிடவோ
உனது குரலில் மயங்கி கிடக்கவோ
அனைத்திருந்து
விவாதங்கள் செய்யவோ
மெல்லிய இரவில் உனது தேகம் தந்துவிட்ட
மோகத்தை நினைதிருக்கவோ
எல்லவ்ற்றுகாக்கவுமே உன்னை
என்னவளாக்கவோ
முடியாதிருப்பினும்
அன்பை கொடுக்கவும்
அன்பை எடுக்கவும்
எனக்கிருக்கும் உரிமை பறிபோகாதவரை
நாம் காதல் செய்வோம் !

1 comment:

baln said...

anna mono rail pathi oru post podunga ..nanri